


'அட்டக்கத்தி' நந்திதா, இதுவரை, தான் நடித்த அனைத்து படங்களிலுமே, சிறப்பாக நடித்து, அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இதனால், 'நந்திதா, எல்லா கேரக்டருக்கும் பொருத்தமாக இருப்பார்' என, இயக்குனர்கள், அவரின் வீட்டுக்கு படையெடுத்து வருகின்றனராம். இதனால், அம்மணியின் கைவசம், இப்போது, ஏராளமான படங்கள் உள்ளன. 'முன்னணி ஹீரோக்களுடன் மட்டும் தான், நடிக்க வேண்டும் என்று ஆசைப்படாமல், மனதை தொடும்
வித்தியாசமான வேடங்களாக நடிக்கவே விரும்புகிறேன். காதல், சென்டிமென்ட் என,
உணர்வுகளை பிரதிபலிக்கும் கதைகளாக மட்டுமே நடித்து, ரசிகர்களின் நெஞ்சில்
நிறைந்திருக்க ஆசைப்படுகிறேன்' என்கிறார்.