Recent Post

தேர்தல் நேரத்தில் வரும் அரசியல் படம்



இது தேர்தல் சீசன். அதனால் அரசியலை மையமாக கொண்ட படங்கள் ரிலீசாவதில் மும்முரம் காட்டி வருகின்றன. சுதேசி படத்தை இயக்கிய ஜே.பி.அழகர் இயக்கி வரும் படம் பிரமுகர். திரிசூல், ஜெசி, மோகனவேல், மஞ்சுவா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இந்தப் படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து வருகிறது. இப்போது தேர்தல் நெருங்குவதால் ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்கள். காரணம் இது அரசியல் படம். அதைப் பற்றி இயக்குனர் ஜே.பி.அழகர் இப்படிக் கூறுகிறார்.

காதலுக்காக போராடுகிற இளைஞர்கள் ஏன் நாட்டுக்காக போரடக்கூடாதுன்னு சொல்ற படம். காதல் காதல்னு தங்களோட நேரத்தையும், சக்தியையும் இளைஞர்கள் வீணாக்கிகிட்டிருக்காங்க. அவுங்கள நாட்டு பக்கம் திருப்புற படம். இன்றைய அரசியல் சூழ்நிலையை மாற்ற நினைக்கிற நான்கு இளைஞர்களின் கதை. படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது. அடுத்த மாதம் ரிலீஸ் பண்றோம் என்கிறார் அழகர்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)