
நயன்தாராவுடனான காதல் முறிந்து பல ஆண்டுகளுக்கு பிறகு ஹன்சிகாவை காதலித்தார் சிம்பு. இதை அவரே சொல்லியிருந்தால் யாருமே நம்பியிருக்க மாட்டார்கள். ஆனால் ஹன்சிகாவே டுவிட்டரில் வெளியிட்டதால் நம்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதிலும் சிம்புவின் ரசிகர்கள் அவர்களை பெரிய அளவில் வாழ்த்தி வந்தவர்கள், அவர்கள் இணைந்து நடித்து வரும் வாலு, வேட்டை மன்னன் படங்கள் திரைக்கு வரும்போது இருவருக்குமே ஜோடியாக கட்அவுட் வைத்து அசத்தி விட வேண்டும் என்றும் திட்டமிட்டு வந்தனர்.
அதோடு, டுவிட்டரில் ஹன்சிகாவை தொடர்பு கொள்ளும்போது அண்ணி என்றே முறைவைத்து அழைத்து வந்தனர். அந்த அளவுக்கு சிம்பு-ஹன்சிகாவை விட ரசிகர்கள் அவர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால், திடீரென்று ஒருநாள் அவர்கள் காதல் முறிந்து விட்டதாக அறிவித்தபோது சிம்புவின் ஆத்மார்த்தமான ரசிகர்கள் மனசுடைந்து விட்டார்கள்.
ஆனால், ஹன்சிகா என்னை ரொம்பவே படுத்தி எடுத்து விட்டார். அவரை விட்டு பிரிந்த பிறகுதான் நிம்மதியாக இருக்கிறேன் என்று சிம்பு டுவிட் செய்ததையடுத்து, சில ரசிகர்கள் ஹன்சிகாவுக்கு போன் செய்து, அப்படி சிம்புவுக்கு என்னதான் டார்ச்சர் கொடுத்தீர்கள் என்று கேட்டு அவரை நச்சரித்து வருகிறார்களாம். அதனால், இப்போது செல்போன் பேசுவதையே தவிர்தது விட்ட ஹன்சிகா, தனது பர்சனல் நம்பரைகூட தனது தாய்குலம் மோனா மோத்வானியிடம் ஒப்படைத்து விட்டார்.