Recent Post

படவாய்ப்புகள் பறிப்பு: சமந்தா–ஹன்சிகா போட்டி



படவாய்ப்புகள் பறிப்பு: சமந்தா–ஹன்சிகா போட்டி
சமந்தா, ஹன்சிகா இடையே போட்டி நிலவுகிறது. சமந்தா படங்களை ஹன்சிகா பறித்துக் கொள்கிறாராம். இருவரும் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளாக உள்ளனர்.

சமந்தா தற்போது சூர்யா ஜோடியாக ‘அஞ்சான்’, விஜய் ஜோடியாக ‘கத்தி’ படங்களில் நடிக்கிறார். மேலும் நான்கு தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன.

ஹன்சிகா ‘மான் கராத்தே’, ‘வாலு’, ‘அரண்மனை’, ‘உயிரே உயிரே’, ‘மீகாமன்’, ‘வேட்டை மன்னன்’, ‘ரோமியோ ஜூலியட்’ ஆகிய 7 படங்களில் நடிக்கிறார். ஒரு தெலுங்கு படமும் உள்ளது.

இரு மொழிகளிலும் ஹன்சிகா, சமந்தா இடையேதான் போட்டி நிலவுகிறது. சமந்தா படங்களில் நடிக்க நிறைய நிபந்தனைகள் விதிக்கிறாராம். விளம்பர போஸ்டர்களில் கதாநாயகனுக்கு இணையாக தனது படமும் இடம்பெற வேண்டும் என்றும் பட விழாக்களிலும் தனக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்றெல்லாம் தயாரிப்பாளர்களிடம் வற்புறுத்துகிறாராம்.

ஆனால் ஹன்சிகா இதற்கு நேர்மாறாக இருக்கிறார். ஒப்பந்தப்படி தனக்குரிய முழு சம்பளத்தையும் கொடுத்து விட்டால் மற்ற விஷயங்கள் பற்றி அவர் கவலைப்படுவது இல்லை. போஸ்டரில் தனது படம் இல்லாமல் இருந்தாலும் வருத்தப்படுவது இல்லை என்கின்றனர். இதனால் சமந்தாவுக்கு போக வேண்டிய படங்கள் ஹன்சிகாவுக்கு மாறுகிறதாம். இதுவே இருவர் மோதலுக்கு காரணம் என்கின்றனர்.


Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)