
‘எங்கேயும் காதல்’ படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி - ஹன்சிகா ஜோடி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறது.
இந்தப் படத்துக்கு ‘ரோமியோ ஜூலியட்’ என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரொமான்டிக் காதல் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தில் ஹன்சிகா ஏர் ஹாஸ்டஸ் ஆக நடிக்கிறார். படத்தை இயக்குபவர் லக்ஷ்மண். இவர், எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர்.
படத்திற்கு இசையமைப்பவர் டி.இமான் இசையமைக்க ‘வாயை மூடி பேசவும்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். ‘மெட்ராஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பில் நந்தகோபால் தயாரிக்கிறார். சமீபத்தில் இந்தப் படம் தொடர்பான ஃபோட்டோ ஷூட் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள்.
இப்புகைப்படங்கள் இப்போது இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருக்கின்றன. தற்போது ஜெயம்ரவி ‘பூலோகம்’, அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிக்கும் படம் என பிஸியாக இருக்கிறார். இந்தப் படங்களை முடித்த கையோடு புதிய படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.