Recent Post
கம்யூனிஸ்ட் சிந்தனையாளர் கார்ல் மார்க்சாக நடிக்கிறார் ஜோ மல்லூரி
கும்கி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் எழுத்தாளர் ஜோ மல்லூரி, அதன் பிறகு தொடர்ச்சியாகவும், பிசியாகவும் நடித்து வருகிறார். அஞ்சான், அப்புச்சி கிராமம், மொசக்குட்டி, இரும்பு குதிரை, உள்பட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். ரஷ்யாவில் உள்ள கலாச்சார அமைப்பு ஒன்று கார்ல் மார்க்ஸ் பற்றிய ஆவணப் படம் ஒன்றை எடுக்க உள்ளது. அதில் கார்ல் மார்க்சாக நடிக்க ஜோ மல்லூரி தேர்வாகியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நான் நடிக்க தேர்வாகி இருப்பது ஒரு ஆவணப் படம்தான். ஆனால் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் சினிமா போன்று அதனை தயாரிக்கிறார்கள். இணையதளத்தில் எனது போட்டாவை பார்த்து விட்டு நான் கார்ல் மார்க்ஸ் சாயலில் இருப்பதை கணித்து என்னை தொடர்பு கொண்டார்கள். போட்டோ ஷூட் வைத்து தேர்ந்தெடுத்தார்கள். இப்போது கார்ல் மாக்ஸ் பற்றி நிறைய படித்து வருகிறேன். அவரைப் பற்றி வந்திருக்கும் படங்களையும் பார்த்து வருகிறேன். ரஷ்யாவிலும், லண்டனிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது என்றார்.
Smiley :)

:D

:)

:[

;)

:D

:O

(6)

(A)

:'(

:|

:o)

8)

(K)

(M)