
இரும்புக்குதிரை படத்தில் லட்சுமிராய் சவாரி செய்யப்போவது உறுதியாகியுள்ளது.
‘ஒன்பதுல குரு’ படத்துக்குப் பிறகு லட்சுமி ராயை கோடம்பாக்கம் கண்டுகொள்ளவில்லை. இதனால் அவர் தன்னுடைய முழு கவனத்தையும் மலையாள திரையுலகம் பக்கம் திருப்பினார். அங்கு இரண்டு படங்களில் நடித்து வருகிறார். தமிழை பொறுத்தவரையில் அவர், அதர்வா நடிக்கும்‘இரும்பு குதிரை’ மற்றும் சுந்தர்.சியின் ‘அரண்மனை’ என இரண்டு படங்கள் மட்டுமே கைவசம் வைத்துள்ளார்.
இதில் இரும்பு குதிரை’ படத்திலிருந்து லட்சுமிராய் விலகிவிட்டார் என்று சில நாட்களுக்கு முன் செய்திகளும் வெளியானது. கிட்டத்தட்ட 60 சதவீத படப்பிடிப்பு லட்சுமி ராய் இல்லாமலே முடிந்துவிட்டதால் அது உண்மையாக இருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்தது. ஆனால் தற்போது லட்சுமிராய் இந்தப்படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி மீண்டும் உறுதியாகியுள்ளது. படத்தில் இன்னொரு நாயகியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார்.
அதனால தன்னுடைய காட்சியை எடுக்க எங்க நீண்ட நாட்கள் ஆகலாம் எனக் கருதிய லட்சுமிராய் படத்தில் இருந்து வெளியேறினாராம். அதற்கேற்ற மாதிரி சமீபத்தில் தான் இத்தாலியில் கிட்டத்தட்ட 30 நாட்கள் நீண்டதொரு படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு வந்திருக்கிறார்கள். இனிமேல்தான் லட்சுமிராய் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட இருக்கின்றன. அதுவும் வெறும் 12 நாட்கள் படப்பிடிப்புதானாம்.
இந்த இடைவெளியில் லட்சுமிராய்க்கு மாற்றாக வேறு ஒரு நடிகையை தேடிப்பார்த்ததாம் படக்குழு. ஆனால் அவர்களில் ஒருவரும் செட் ஆகவில்லையாம். இறுதியில் வேறுவழியில்லாமல் லட்சுமிராயையே மீண்டும் அணுகியிருக்கிறார்கள். அவரும் எந்தவித பிகுவும் பண்ணாமல் ஓகே சொல்லிவிட்டாராம்.