Recent Post

ஒரு மோதல் ஒரு காதல் திரைவிமர்சனம்




oruநடிகர் : விவேக் ராஜகோபால்
நடிகை : மேகா பர்மன்
இயக்குனர் : கீர்த்திகுமார்
இசை : கே.ஆர்.கவின்
ஓளிப்பதிவு : யுகா
இஞ்ஜினியரிங் படிச்சுட்டு இயக்குனர் கனவுல சுத்திகிட்டு இருக்கற ஹீரோ கார்த்திக். அவர எப்பவும் திட்டிகிட்டு இருக்கற டாக்டர் அப்பா. சப்போர்ட் பண்ற அம்மா, பொருப்பான அண்ணன், எப்பவும் பிரியாணி பைத்தியமா அண்ணி. இப்படி, தனது நண்பர்களுடன் எந்த வேலைக்கும் போகாமல் சுற்றித் திரியும் நாயகனுக்கு ஒரு பெண்ணை கண்டதும் காதல் ஏற்படுகிறது.
இந்த காதல் விவகாரம் ஒரு நாள் பெண் வீட்டுக்கு தெரிய வருகிறது. வழக்கம்போல் பெண் வீட்டிலிருந்து காதலுக்கு எதிர்ப்பு கிளம்ப நாயகன் ரிஜிஸ்டர் மேரேஜ்க்கு பிளான் போடுறார். ஆனால், கடைசியில் குடும்பத்தினரின் நெருக்கடியில் அந்த பெண் நாயகனை யாரென்றே தெரியாது என்று சொல்லி விடுகிறாள். முதலில் காதலித்த பெண்ணால் ஏற்பட்ட அவமானம் ப்ளஸ் காதல் தோல்வியினால் பெங்களூருவுக்கு வேலைக்குப் போகிறார் கார்த்திக். அங்கு பாடம் சொல்லிக் கொடுக்க போன இடத்தில் படிக்க வந்த பஞ்சாபி பெண்ணை கதாநாயகனுக்குப் பிடித்துப் போகிறது. அவர் மீது காதல் வர இரண்டாது காதலாவது உருப்படியாக ஒர்க்அவுட் ஆனதா இல்லையா என்பது மீதி கதை.
கதாநாயனாக நடித்திருக்கிறார் புதுமுகம் விவேக் ராஜ கோபால். சிரியஸ்ஸான கேரக்டர் இல்லை என்பதால் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார்.
கொஞ்சம் கண்டிப்பான அப்பாவாக வருகிறார் பிரமிட் நடராஜன். ஹீரோவுக்கு அண்ணனாக பாலாஜி மோகனும் அண்ணியாக அம்முவும் நடித்திருக்கிறார்கள்.
நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம் என்பதை வைத்து சில நகைச்சுவைகளை வைத்திருப்பது, பிரியாணிக்காக என்னவேண்டுமானாலும் செய்கிற நாயகனின் அண்ணியாக நடித்திருக்கும் அம்மு, இரண்டாம்காதலியாக வருகிற ரூபா என்று இரண்டுமணிநேரம் ஓடுகிற படத்தில் அங்கங்கே சில ஆறுதல்கள் இருக்கின்றன என்பதைத்தாண்டி…. சொல்வதற்கொன்றுமில்லை.
கவின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கிற மாதிரி அமைந்திருக்கின்றன. பின்னணி இசை ஓகேதான். யுகாவின் ஒளிப்பதிவு கவர்ந்துள்ளது.
படத்தின் முதல்பாதியில் ஒரு மோதல் இரண்டாம்பாதியில் ஒரு காதல் என்று தந்திருக்கிறார் இயக்குனர் கீர்த்திகுமார். இவருக்கு இது முதல் படம். தன் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை படமாக்குகிறேன் என்று களம் இறங்கியவர் இன்னும் கொஞ்சம் சூடான சுவையான காட்சிகளை படத்தியில் வைத்திருந்தால் ஒரு மோதல் ஒரு காதல் இன்னும் அதிகமாகவே நம்மை வசப்படுத்தியிருக்கும் அல்லவா…!
.மொத்தத்துல ஒரு மோதல் ஒரு காதல் – காதல் எத்தனை தடவ பண்ணாலும் கசக்காதுனு சொல்ல ட்ரை பண்ணியிருக்காங்க..

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)