சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்காவும், ஏமி ஜாக்சனும் நடிக்கிறார்களாம். அஜீத் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. அஜீத் இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அஜீத்துக்கு ஜோடி தேடும் பணி முடிந்துள்ளது.

அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்றே முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் தெலுங்கு படங்களில் பிசியாக இருப்பதால் அஜீத் படத்தில் நடிக்க முடியாத சூழல் என்று கூறப்பட்டது.

அனுஷ்கா நடிக்க முடியாது என்பதால் கௌதம் பாலிவுட்டில் ஹீரோயின் தேடி வந்தார். இந்நிலையில் அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை சமந்தா கௌதமிடம் தெரிவித்தார்.

ஏற்கனவே நீ தானே என் பொன் வசந்தம் தோல்வி அடைந்ததால் சமந்தாவை மீண்டும் தனது படத்தில் நடிக்க வைக்க விரும்பாத கௌதம் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.

இந்நிலையில் அனுஷ்கா அஜீத் படம் என்பதால் எப்படியோ டேட்ஸை அட்ஜஸ்ட் செய்து கௌதமுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார். அதனால் அனுஷ்கா நடிப்பது உறுதியாகிவிட்டது.

அஜீத்துக்கு மற்றொரு நாயகியை தேடி அலைந்தபோது தான் 'தல' தரப்பில் ஏமி ஜாக்சனை பரிந்துரை செய்துள்ளனர். இதையடுத்து கௌதம் ஏமி ஜாக்சனை ஒப்பந்தம் செய்துள்ளாராம். ஏமி வரும் காட்சிகள் அனைத்தும் வெளிநாடுகளில் படமாக்கப்படுகிறதாம்.