மும்பை: தனது கணவர் ‘மெய்ன் தேரா ஹீரோ' பட நாயகன் வருண் தவான் போன்று இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் நடிகை இலியானா. தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமானவர் தெலுங்கு நடிகை இலியானா. ஆனால் தமிழில் அடுத்தடுத்த வாய்ப்புகள் அமையாத நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகையானார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்பு இயக்குநர் சங்கரின் நண்பன் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்தார். தற்போது ஹிந்தி படங்களிலும் இலியானா நடித்து வருகிறார். ரன்பீருடன் பர்பி மற்றும் படா போஸடர் நிக்லா ஹீரோ படங்களிலும், வருண் தவானுடன் மெய்ன் தேரா ஹீரோ படத்திலும் இலியானா இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் தனது வருங்காலக் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் இலியானா. அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
தனித்துவமான மனிதர்....

எனது கணவர் வருண் தவான் போன்று இருக்க வேண்டும். அவர் வேறுபட்ட அளவில் இருக்கிறார் என்று தனிப்பட்ட முறையில் நான் உணர்கிறேன்.
பக்குவமான ஆண்...

அவருடன் எனது உணர்வுகளை நான் பகிர்ந்து கொண்டுள்ளேன். அவர் மிக அழகான, பக்குவமடைந்த மற்றும் எப்பொழுது என்ன பேச வேண்டும் என்பதை அறிந்தவர்
வருணின் தன்மைகள்...

அவரது தன்மைகள் எனது வருங்கால வாழ்க்கை துணைவரிடம் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
கெமிஸ்ட்ரி...

நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் ஷாகித் கபூர் ஆகியோருடன் நான் பணியாற்றியுள்ளேன். ஆனால், வருண் உடன் எனது கெமிஸ்ட்ரி வேறுபட்ட அளவில் ஒன்றிணைந்து உள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் ரிலீஸ்...

இலியானாவின் இந்தப் பேட்டியால் வருகிற ஏப்ரல் 4ந்தேதி வெளிவர உள்ள 'மெய்ன் தேரா ஹீரோ' படத்தின் எதிர்பார்ப்புக் கூடியுள்ளது.