'அப்படி நடிக்க மாட்டேன்; இப்படி நடிக்க மாட்டேன்' என, ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் நடித்து வருபவர், நஸ்ரியா. ஆனால், நஸ்ரியாவிடம் ஒரு பலவீனம் உள்ளது. 'ஐந்து நிமிடம், வாயை மூடி பேசாமல் இருக்க வேண்டும்' என, கூறினால் மட்டும், அவரால், முடியவே முடியாதாம். நஸ்ரியா கூறுகையில்,'நான், அனைவரிடமும் சகஜமாக பேசுவேன். இந்த விஷயத்தில்
யாரிடமும், பாரபட்சம் பார்ப்பதில்லை. டைரக்டர் துவங்கி, 'லைட்பாய்' வரைக்கும், எனக்கு
நண்பர்கள் தான்' என்கிறார். மேலும்,'எதை வேண்டுமானாலும் என்னால் அடக்க முடியும். ஆனால், ஒரு நிமிடம் கூட என்னால் பேசாமல் மட்டும் இருக்கவே முடியாது' என்கிறார். இதனால் தான், அவர் நடிக்கும் புதிய படத்துக்கு, 'வாயை மூடி பேசவும்' என, பெயர்
வைத்துள்ளனர் போலிருக்கிறது.