
வடிவேல் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் ஜகதல புஜபல தெனாலிராமன். இப்படத்தை யுவராஜ் இயக்கியுள்ளார்.
இவர் ஏற்கெனவே சடகோபன் ரமேஷ் நடித்த போட்டா போட்டி என்ற படத்தை இயக்கியவர் என்பது அனைவரும் அறிந்ததே. படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியானது. இசை வெளியீட்டு விழா ஏப்ரல் 1ல் நடக்க உள்ளது. படத்தை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் இப்போது படத்தின் ரிலீஸ் தேதி திடீரென ஏப்ரல் 18-க்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.
காரணம், என்னவென்று விசாரித்ததில் ஏப்ரல் 11-ம் தேதி தான் விஷால் நடித்துள்ள ‘நான் சிகப்பு மனிதன்’ படமும் ரிலீசாகிறது. அதனால ஒரே நாளில் இரண்டு பெரிய படங்கள் வெளியானால் அது வசூலை பெரிய அளவில் பாதிக்கும் எனக் கருதி ‘தெனாலிராமன்’ படத்தின் ரிலீஸை தள்ளி வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
தெனாலிராமன் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக மீனாட்சி சேஷாத்திரி என்ற புதுமுகத்தை அறிமுகம் செய்துள்ளனர். இந்தப் படத்தின் ஒரு பாடல் காட்சியையும், க்ளைமாக்ஸ் காட்சியையும் சீனாவில் படமெடுத்துள்ளார்களாம். தம்பி இராமையா இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.