Recent Post

ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் நடிகர் பவன் கல்யாண்!



தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை தொடங்கியபோது, என்டிஆருக்கு பிறகு ஆந்திராவில் ஒரு நடிகர் முதலமைச்சராகப்போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப சிரஞ்சீவியும் பரபரப்பாக அரசியல் பிரவேசத்தை தொடங்கினார். ஆனால் சில ஆண்டுகளிலேயே காங்கிரசுடன் தனது கட்சியை இணைத்துக்கொண்டு, தானும் காங்கிரசில் ஒரு அங்கமாகி விட்டார்.

இப்படி அவர் காங்கிரசுடன் இணைந்தது அவரது பிரஜா ராஜ்யம் கட்சியில் இருந்த பலருக்கு பிடிக்கவில்லையாம். குறிப்பாக சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாணுக்கே அது பிடிக்கவில்லை. இவர், அண்ணன் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருந்தவர். அதனால் அரசியலில் தனக்கு இருந்த ஈடுபாட்டை சமீபத்தில் ஒரு புத்தகமாக வெளியிட்ட பவன் கல்யாண் தற்போது ஜனசேனா என்ற பெயரில் ஒரு தனிக்கட்சி தொடங்கியுள்ளார்.

இது அண்ணன் சிரஞ்சீவிக்கு போட்டியாக உதயமான கட்சி அல்ல என்று தெரிவித்துள்ள பவன் கல்யாண், ஆந்திர மக்களின் நலனுக்காக இந்த கட்சியை தொடங்கியிருக்கிறேன். அதனால் ஆந்திர மக்களின் நலனுக்காக பாடுபட நினைக்கும் அனைவரும் இந்த கட்சியில் இணையலாம் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். பவன் கல்யாணின் இந்த திடீர் தனிக்கட்சி பிரவேசம் ஆந்திர அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)