
‘சாய் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கும் படம், ‘ஜாக்கி’. இந்தப் படத்தில் ‘சாட்டை’ படத்தில் நடித்த யுவன் ஹீரோவாக நடிக்கிறார். கதாநாயகியாக தர்ஷிதா நடிக்கிறார்.
மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன், நளினி, ரவிபிரகாஷ், சேரன்ராஜ், கஞ்சாகருப்பு, வாசுவிக்ரம், டான்ஸ்மாஸ்டர் தினா, ரிஷா, ரேகாஸ்ரீ, தளபதி தினேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி கோவை ரவிராஜா இயக்குகிறார். இப்படத்தின் பாடல் காட்சிகள் அனைத்தும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது.
"என் உயிரான ஜீவன் எனை நானே தேடும் நேரம்..." என்ற பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. யுவன் - தர்ஷிதா ஆடிப்பாடும் இப்பாடல் இனிமையான மொலொடிப் பாடலாக அமைந்துள்ளது. மேலும் மூன்று பாடல்களை மொத்தம் 10 நாட்களில் படமாக்கியுள்ளனர்.
முழுக்க முழுக்க காதல் படமாக உருவாகும் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை ஏற்றிருக்கிறார் ரவி.