Recent Post

புறம்போக்கு படத்துக்கு முழு இன்சூரன்ஸ்



புறம்போக்கு படத்துக்கு முழு இன்சூரன்ஸ்
பைனரி பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக யுடிவி நிறுவனத்துக்கு முதல் காப்பி அடிப்படையில் எஸ்.பி.ஜனநாதன் தயாரித்து இயக்கும் படம், ‘புறம்போக்கு’. ஆர்யா, ஷாம், விஜய் சேதுபதி, கார்த்திகா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு முழுமையாக இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி எஸ்.பி.ஜனநாதனிடம் கேட்டபோது கூறியதாவது: சினிமாவுக்கு இன்சூரன்ஸ் செய்வது இங்கு குறைவு. சில பகுதிக்கு மட்டும்தான் செய்வார்கள். இந்தப் படத்துக்கு முழுமையாக இன்சூரன்ஸ் செய்ய முடிவெடுத்தோம். ஏனென்றால் படத்தின் ஷூட்டிங் நடக்கும் இடம் ரிஸ்க்கானது.

இமயமலையில் நாங்கள் ஷூட் பண்ணும்போது மூன்று அடி உயரத்துக்குப் பனி நிறைந்திருந்தது. இதனால் தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படும். இதையடுத்து அவர்களுக்குத் தேவையான ஸ்னோ கோட், ஷூ உட்பட பல பொருட்களை கொடுத்து அழைத்துச் சென்றோம். ராஜஸ்தான் பாலைவனத்தில் கடும் வெயிலில் ஷூட் பண்ணினோம். அங்கு ரயில் ஒன்றில் படப்பிடிப்பு நடத்தினோம். அதிரடியான சண்டை காட்சிகளை எடுத்தோம். அதே போல இன்னும் பல ரிஸ்க்கான காட்சிகள் படத்தில் இருப்பதால் முழு படத்தையும் இன்சூரன்ஸ் செய்தோம். பொதுவாகச் சண்டை காட்சிகளை இன்சூரன்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொள்ளாது. ஆனால் இந்தப் படத்துக்கு ஏற்றுக்கொண்டது. இவ்வாறு ஜனநாதன் கூறினார்

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)