Recent Post

சென்னையில் தயாரான அனிமேஷன் படத்துக்கு பிக்கி விருது



63e38652-e0c0-4960-9874-23aa63207365OtherImage
சென்னையில் உள்ள அகரம் அனிமேஷன் ஸ்டூடியோ தயாரித்துள்ள படம் தி டர்பூஸ்டர்ஸ். ஆபத்தில் இருக்கும் பள்ளி குழந்தைகளை காப்பாற்றும் மூன்று வீரதீர சிறுவர்களை பற்றிய கதை. 75 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த படம் 6 முதல் 12 வயது சிறுவர்களுக்கானது.
சிறுவர்களில் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு அறிவுறுத்தலுக்காக தயாரிக்கப்பட்ட படம். இந்த படம் உலகம் முழுவதும் ஹோம் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. உலக சிறுவர் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது.
தற்போது இந்தப் படத்திற்கு 2013ம் ஆண்டிற்கான சிறந்த குழந்தைகள் அனிமேஷன் படத்திற்கான பிக்கி விருது கிடைத்துள்ளது. சர்வதேச திரைப்பட வர்த்தக பிரிவின் கூட்டமைப்பான பிக்கி ஆண்டு தோறும் அனிமேஷன் படங்களுக்கு விருது வழங்கி வருகிறது.
அந்த வரிசையில் இந்தப் படம் விருதினை வென்றுள்ளது. சென்னையில் தயாரான அனிமேஷன் படம் இந்த விருதை பெறுவது இதுவே முதல் முறையாகும். படத்திற்கு அபிஷேக் கிருஷ்ணன் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார், கிரிகோரி ஹிண்டே இசை அமைத்துள்ளார். ஏ.கே.சுதாகர் இயக்கி உள்ளார்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)