கன்னட த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார் நவ்யா நாயர்.
தமிழில் அழகிய தீயே, மாயக்கண்ணாடி, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். அவருக்கும் சாப்ட்வேர் எஞ்சினியருக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
திருமணத்துக்குப் பின் பெங்களூருவில் கணவருடன் வசித்து வந்தார். அவருக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. திருமணமான எல்லா நடிகைகளையும் போல மீண்டும் திரைக்கு திரும்பியிருக்கிறார் நவ்யா. த்ரிஷ்யம் மலையாளப் படத்தை கன்னடத்தில் பி.வாசு ரீமேக் செய்கிறார்.
ரவிச்சந்திரன் நடிக்கும் இந்தப் படத்தில் அவரின் மனைவியாக இரு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க உள்ளார். இது மலையாளத்தில் மீனா நடித்த வேடம். த்ரிஷ்யத்தை தெலுங்கில் ஸ்ரீப்ரியா இயக்கி வருகிறார். வெங்கடேஷ் ஹீரோ. மலையாளத்தில் நடித்த அதே வேடத்தை தெலுங்கிலும் மீனாவே செய்கிறார்.
