Recent Post

குக்கூவை நான் முதல் படமாக இயக்க காரணமே டைரக்டர் ஷங்கர்தான்! – ராஜூமுருகன்



mqdefault
குக்கூ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருப்பவர் ராஜூமுருகன். முதல் படத்திலேயே மாற்றத்திறனாளிகளின் காதலை படமாக்கி தான் ஒரு மாறுபட்ட இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார். அதனால், தற்போது கோடம்பாக்கம் எங்கும் ராஜூமுருகனைப்பற்றிய பேச்சுதான் அடிபடுகிறது.
ஆனால், இப்படி அவர் மாறுபட்ட இயக்குனராக அறிமுகமானதற்கு முக்கிய காரணமே பிரமாண்ட இயக்குனர் ஷங்கர்தானாம்.
அவரது தயாரிப்பில் தனக்கு படம் இயக்க சான்ஸ் கேட்டு ராஜூமுருகன் சென்றபோது, குக்கூ கதையையும் சொன்னவர், இன்னொரு கதையையும் சொல்லி அதைத்தான் முதல் படமாக இயக்கப்போவதாக சொன்னாராம்.
ஆனால், டைரக்டர் ஷங்கரோ, முதல் படத்தில் உங்களுக்கென்று ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும். அதனால் மாற்றுத்திறனாளிகளின் கதையை படமாக்குங்கள்.
அது பெரிய இடத்தை பெற்றுத்தரும் என்றாராம். அப்படி சொன்ன ஷங்கரால், அந்த கதையை தயாரிக்க முடியவில்லையாம். அதனால் அதையடுத்து வேறு தயாரிப்பாளரிடம் அந்த கதையை சொல்லி ஓ.கே பண்ணி இப்போது படத்தையும் ஹிட்டாக கொடுத்துவிட்டார் ராஜூமுருகன்.
இந்த தகவலை சொல்லும் அவர், இந்த குக்கூ எனது கதையாக இருந்தாலும் நான் முதல் படமாக இயக்கியதற்கு முழுக்காரணம் ஷங்கர் சார்தான் என்கிறார் ராஜூமுருகன்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)