Recent Post

நாயகனாக அறிமுகமாகிறார் “சிலந்தி” பட வில்லன்



“சிலந்தி” படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருப்பவர் சந்துரு. தற்போது இவர் “மது மாது சூது”  என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தயாரித்து இயக்கவும் செய்துள்ளார். அதோடு தனது பெயரையும் மாற்றியுள்ளார். சந்துரு என்கிற தனது பெயரை மாற்றி ராஜஷந்ரு என்று வைத்துள்ளார். இப்படத்தின் கதாநாயகிகளாக பெங்களுரை சேர்ந்த மாடல் சந்தனா மற்றும் சென்னையை சேர்ந்த விக்னேஷா அறிமுகமாகியுள்ளனர் மற்றும் நிறைய புதுமுக நடிகர் நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தைப் பற்றி ராஜஷந்ரு கூறியதாவது,
போதைக்கு அடிமையான ஒரு இளைஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது. 2014 புத்தாண்டு பிறக்கும் அந்த ராத்திரியில் ஒரு ஹைடெக்கான பாரில் அந்த இளைஞன் சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்பை வைத்து பரபரப்பாக இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளோம்.
திருப்பூரில் உள்ள ஒரு பாரை வாடகைக்கு எடுத்து அதன் உள்கட்டமைப்பை ரூபாய் 50-லட்சம் செலவில் மாற்றி அமைத்து 40-நாட்களில்; ஒரே கட்டமாக படபிடிப்பை நடத்தி முடித்துள்ளோம். மே மாதம் வெளியிட தயாராக உள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விரைவாக நடந்துக் கொண்டிருக்கிறது.
இப்படத்தில் ஸ்ரீனி என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார். இவர் 200-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரபல ஒளிப்பதிவாளர் மதி-யின் உதவியாளர் லி & mms.சங்கர் ஒளிப்பதிவாளர்களாக அறிமுகமாகிறார்கள் மற்றும் பிரபல எடிட்டர் கோபிகிருஷ்ணா-வின் உதவியாளர் கே.ஆனந்தி எடிட்டராக அறிமுகமாகிறார். சண்டை பயிற்சியை நாக்-அவுட் நந்தா செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)