Recent Post

அதர்வாவுடன் பலப்பரீட்சை பார்க்க தயாராகும் லட்சுமிராய்!



NT_140327104132000000
காஞ்சனா படத்திற்கு பிறகு ஒன்பதுல குரு படத்தில் நடித்த லட்சுமிராய்க்கு அதையடுத்து கோடம்பாக்கம் கைகொடுக்கவில்லை. அதனால் கன்னடம், இந்தி என்று படவாய்ப்புகளுக்காக படையெடுத்தவர், அங்கு தன்னை யாரும் கண்டு கொள்ளாததால் மறுபடியும் கோலிவுட் கோதாவில் குதித்திருக்கிறார்.
சில படங்களில் இடம்பிடிக்க படுபயங்கரமாக களமிறங்கிய லட்சுமிராய் புது வரவு நடிகைகளின் அதிரடியினால் தோற்றுக்கொண்டேயிருந்தவர், இப்போது அதர்வா நடிக்கும் இரும்புக்குதிரை படத்தை கைப்பற்றி விட்டார்.
இப்படத்தில் நாயகி வேடத்துக்காகத்தான் முதலில் முண்டியடித்தார் லட்சுமிராய். ஆனால், அதர்வாவுக்கு முன்னாடி அவரை நிறுத்தினால் அக்கா மாதிரி இருப்பார் என்பதால் அதற்கு யாரும் உடன்படவில்லை. அதனால் அந்த வேடம் ப்ரியாஆனந்துக்கு எளிதாக கிடைத்து விட்டது.
அதனால், அதே படத்தில் இன்னொரு வில்லி வேடம் உள்ளது என்று டைரக்டர் சொன்னபோது, அந்த ரோல் பற்றி கேட்ட லட்சுமிராய், அதுவும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம் என்பதால் உடனே ஒத்துக்கொண்டார்.
மேலும், பைக் ரேஸை மையமாகக்கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தில் பைக் ரேஸராக நடிக்கும் அதர்வாவுக்கு போட்டியாக லட்சுமிராயும் குதிக்கிறாராம். இதற்காக சரியான ட்ரெய்னரை வைத்து 2 வாரங்களாக முறையாக பயிற்சி பெற்று வரும் லட்சுமிராய், விரைவில் பைக் ரேஸ் காட்சிகளில் நடிக்கப்போகிறாராம்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)