
தமிழ் சினிமாவில் ரொம்ப பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறாராம் சந்தன காமெடி நடிகர். இவர் எந்தப்பட விழாக்களில் கலந்து கொள்வதில்லையாம். இவர் நடித்தப் படமாக இருந்தாலும் அதிலும் கலந்துக் கொள்ளாமல் தவிர்த்து வந்தாராம். தற்போது சொந்தப்பணத்தைப் போட்டு இவரே ஹீரோவாக நடித்து ஒரு படத்தை தயாரித்து வருகிறாராம். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளதாம்.
விரைவில் ஆடியோ ரிலீஸ் உள்ளிட்ட புரமோஷன் வேலைகளை ஸ்டார்ட் பண்ணத் தயாராகி வருகிறாராம் அந்தப்படத்தின் டைரக்டர். இதுவரை எந்தப்படத்தின் விழாக்களுக்கு வராமல் டிமிக்கி கொடுத்து வந்த நடிகர் இந்தப்படத்துக்கு வந்து தானே ஆக வேண்டும் என்று பல பேர் வலையை விரித்து வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்களாம். இந்தச் சமயம் கண்டிப்பாக மாட்டிக் கொள்வார் என்று கோடம்பாக்கத்தினர் சொல்கிறார்களாம்!