
வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் மான் கராத்தே.
திருக்குமரன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இவர் இயக்குனர் ஏ.ஆர். முருகதாசிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர். முருகதாஸ் கதை திரைக்கதை எழுதி இருக்க்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார்.
சிவகார்த்திகேயன்-ஹன்சிகா இருவரும் ஜோடி சேரும் முதல் படம் இது. சூரி மற்றும் ‘எதிர்நீச்சல்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் காமெடியில் கலக்கிய சதீஷ் இந்தப் படத்திலும் கலகலப்பூட்ட வருகிறார்கள். சமீபத்தில் இந்தப்படம் தணிக்கை குழுவினருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் படத்தின் எந்த காட்சியிலும் கத்திரி போடாமல் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
மேலும் படத்தில் இரட்டை அர்த்த வசனம், ஆபாசம், வன்முறை எதுவுமின்றி இயக்கியுள்ளதாக திருக்குமரனுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் இந்தப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். படம் கோடை விடுமுறையொட்டி வருகிற ஏப்ரல் 4-ஆம் தேதி ரிலிசாகவிருக்கிறது.