ஜெய்-சுவாதி ஜோடியாக நடித்து வரும் புதிய படம் ‘வடகறி’. இப்படத்தை சரவணராஜன் என்பவர் இயக்குகிறார். மீகா என்டர்டெய்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், இப்படத்தின் பாடல்களை வரும் ஏப்ரல் 10-ந் தேதி வெளியிடவுள்ளனர்.
நகைச்சுவை கலந்த திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்திற்கு விவேக் ஷிவாவும், மெர்வின் சாலமனும் இணைந்து இசையமைத்துள்ளார்கள். இப்படத்தில் பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.