
நடிகை ஊர்வசி தொழிலதிபர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.
பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இவர் கடந்த 2000-ம் ஆண்டு மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயன் என்பரை காதல் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் தேஜாலட்சுமி என்ற மகள் இருக்கிறாள்.
இந்நிலையில் ஊர்வசிக்கும், மனோஜ் கே.ஜெயனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கடந்த 2008-ம் ஆண்டில் விவாகரத்து பெற்றார்கள். அதன்பிறகு மனோஜ் கே.ஜெயன், கேரளாவைச் சேர்ந்த ஆஷா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்துகொண்டார். ஆனால் மகள் தேஜா லட்சுமி, மனோஜ் கே.ஜெயனிடம் வளர்கிறார். ஊர்வசி மட்டும் சென்னையில் வசித்து வருகிறார்.
தற்போது நடிகை ஊர்வசியும் 2வது திருமணம் செய்து கொண்டார். அவர், சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனத்தை நடத்திவரும் சிவன் என்பவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இருவரும் 6 மாதத்துக்கு முன்பே திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் அதை இப்போதுதான் வெளியில் அறிவிக்கின்றனர். சிவன், நடிகை ஊர்வசி உடைய சகோதரரின் நண்பராம்.