Recent Post

போங்கடி நீங்களும் உங்க காதலும் இம்மாதம் 25 ஆம் தேதி வெளியாகிறது



pongadi-neengalum-unga-kadhalum-movie-stills_01
உதவியாளராக இருந்த எம்.ஏ.ராமகிருஷ்ணன் நடித்து இயக்கிய “போங்கடி நீங்களும் உங்க காதலும்” படம் முடிவடைந்து மாதக்கணக்கில் கிடப்பில் கிடந்தது. எத்தனையோ விநியோகஸ்தர்கள் படத்தைப் பார்த்தும் வாங்கி வெளியிட முன் வரவில்லை.
இந்நிலையில் ரீச் ட்ரீம் மீடியா என்ற நிறுவனம் “போங்கடி நீங்களும் உங்க காதலும்” படத்தை வாங்கி வெளியிட இருக்கிறது. இதற்கு முன் சில படங்களை தயாரித்த கே.ஆர்.கே.மூவீஸ், கே.ஆர்.கண்ணன் நிறைய செலவு செய்து இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.
எம்.ஏ. ராமகிருஷ்ணன் கதாநாயகனாக நடித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ள “போங்கடி நீங்களும் உங்க காதலும்” படத்தில் கதாநாயகிகளாக ஆத்மியா மற்றும் காருண்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.
“போங்கடி நீங்களும் உங்க காதலும்” படத்தின் கதை என்ன?
பெண்கள் பலம், பலவீனம் ஆண்கள் மீது வைத்திருக்கும் அசாத்திய நம்பிக்கை அந்த நம்பிக்கையை பெரும்பாலான ஆண்கள் காப்பாற்றுவதில்லை.
காதலிக்கும் போது இருக்கும் அக்கறையும், அன்பும் கல்யாணத்திற்கு பிறகு முற்றிலும் குறைந்து விடுகிறது இதற்கு முக்கிய காரணம் ஆண்களின் அலட்சியமே! இதை தவறாக பயன்படுத்திக் கொள்ளும் சில ஆண்கள் தற்போதைய தொழில் நுட்பங்களை தவறாக பயன்படுத்திக்கொண்டு பெண்களுக்கு மனதளவிலும், உடலளவிலும் பல இடையூறுகள் தந்து சமூக அவலங்களுக்கு ஆலக்குவதோடு, அவர்களின் வாழ்கையையும் சீரழிக்கிறார்கள்.
அப்படி ஒரு தவறான நட்பினாலும், காதலாலும் ஏற்படும் பாதிப்புகளை பெண்களுக்கு உணர்த்தவும், இந்த மோசமான சூழ்நிலையில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவும்,அவர்களின் மீது அக்கறை கொண்டு உருவாக்கப்பட்டதே இந்த போங்கடி நீங்களும் உங்க காதலும் திரைப்படம்.” என்கிறார் இயக்குநர் எம்.ஏ. ராமகிருஷ்ணன் .
படம் இம்மாதம் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)