Recent Post

அஜித் படத்தில் 2 வில்லன்கள்



அஜித் படத்தில் 2 வில்லன்கள்
அஜித் - கெளதம் மேனன் படத்தினைப் பற்றி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு செய்தி வெளிவந்த வண்ணம் உள்ளன. இதில் முக்கியமாக இசையமைப்பாளர் மற்றும் வில்லனைப் பற்றிய செய்திகள் இதில் முக்கிய இடத்தினை பிடித்திருக்கின்றன. அஜித் - கெளதம் மேனன் - அனுஷ்கா இணையும் படத்தினை ஏ.என்.ரத்னம் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார். மேலும் இப்படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்று விசாரித்த போது பல ருசிகர தகவல்கள் கிடைத்துள்ளன. அஜித் - கெளதம் மேனன் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பது உறுதியாகி உள்ளது. இந்த படத்தில் அஜித்திற்கு இரண்டு வில்லன்கள் இருக்கிறார்கள்.

இதுவரை அவர்கள் வில்லன்களாக நடித்திருக்கக் கூடாது எனவும் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவமாக அமைய வேண்டும் என்பதிலும் படக்குழு தெளிவாக இருந்தது . படத்தின் வில்லன்களாக அரவிந்த்சாமி மற்றும் அருண்விஜய் இருவரும் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இவர்கள் இதுவரை நாயகனாக நடித்து வந்தவர்கள், அஜித் படம் மற்றும் கதையில் வில்லன்களின் பங்கு என்ன என்பதை கேட்டு நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் டான் மெக்கார்தர் அஜித் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். அஜித் - அனுஷ்கா - அரவிந்த் சாமி - அருண்விஜய் என ஒரு புதிய கூட்டணியுடன் அதிரடியான ஒரு போலீஸ் ஆக்ஷன் கதைக்கு கெளதம் மேனன் திட்டமிட்டு இருக்கிறார்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)