Recent Post

400 தியேட்டர்களில் ரிலீசாகிறது தலைவன்



தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலாவின் உறவினர் பாஸ் என்கிற பாஸ்கரன் நடித்திருக்கும் படம் தலைவன். அவருக்கு ஜோடியாக நிகிதா பட்டீல் நடித்திருக்கிறார்.
சித்திரை செல்வன் தயாரித்திருக்கிறார். உளவுத்துறை எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கி இருக்கிறார். இந்தப் படம் வருகிற 18ந் தேதி பெரிய பட்ஜெட் படங்களுக்கு இணையாக 400 தியேட்டர்களில் ரிலீசாகிறது.
பல கோடி செலவில் பெரிய ஆக்ஷன் படமாக இதனை உருவாக்கி இருக்கிறார்கள். 85 லொக்கேஷன்களில் 85 காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள்.
கோவாவில் கப்பலை வாடகைக்கு எடுத்து நடுக்கடலில் 6 நாட்கள் ஷூட்டிங் நடத்தி இருக்கிறார்கள். பின்னி மில்லில் கிளைமாக்ஸ் எடுத்திருக்கிறார்கள். பாஸ்கரனுடன் சேர்ந்து சந்தானம் காமெடி பண்ணியிருக்கிறார். நிகிதா பட்டீல் கவர்ச்சி காட்டியிருக்கிறார்.
காவல்துறையில் சேர்ந்து பணியாற்ற நினைக்கும் ஒரு இளைஞனை, காவல்துறை அதிகாரிகள் சிலர் அவமானப்படுத்துகிறார்கள். இதனால் ஆத்திரமடையும் அந்த இளைஞன் காவல்துறை செய்ய முடியாத காரியங்களை செய்து காட்டுவதுதான் கதையாம்.
NT_140415141404000000

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)