
‘வீரம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜீத் நடிக்கும் 55-வது படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இப்படத்தை ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார்.
ஏற்கனவே அஜீத் நடித்த ஆரம்பம் படத்தை ஸ்ரீ சத்ய சாய் மூவிஸ் தயாரித்தது. அதன்பிறகு அஜீத்தின் 55வது படத்தையும் தயாரிக்கிறது. இந்தப்படம் வருகிற ஏப்ரல் 9ம் தேதி புதன்கிழமை ஆரம்பமாக உள்ளது.
இப்படத்தின் தலைப்பு மற்றும் அஜீத்துடன் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்களின் விபரம் விரைவில் வெளியிடப்படும் என்றும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார்.