Recent Post

காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை முன்னோட்டம்




எஸ்.ஆர். கிரிபேஷன்ஸ் சார்பில் சத்யசீலன், எஸ்.ரவிக்குமார், எஸ்.இளங்கோ, வி.யசோதா, நால்வரும் கூட்டாக தயாரிக்கும் படத்துக்கு காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை என பெயரிடப்பட்டு உள்ளது.

இதில் சத்யசீலன், ரவிக்குமார், இளங்கோ, இளையராஜா, ஜெனிப்பிரியா, சைலஜா, ராதிகா, சரளா, சிசர் மனோகர், போண்டாமணி, மணிமாறன், கபாலி ஆகியோர் நடிக்கின்றனர். கானா உலகநாதனும் முக்கிய கேரக்டரில் வருகிறார்.

முன்று காதல் ஜோடிகள் காலை 9.30 மணிக்கு மோட்டார் சைக்கிளில் தனித்தனியாக மேட்டுப் பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு பயணிக்கின்றனர். மாலை 4.30 மணிக்கு அவர்கள் மீண்டும் மேட்டுப் பாளையத்தில் இருக்க வேண்டும். இந்த இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் சந்திக்கும் திடுக்கிடும் சம்பவங்களே கதை, ஆடல், பாடல், ஊடல், மோதல், அக்ஷன் கலவையாக தயாராகிறது.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தமிழ் ஜெ.இயக்குகிறார். ஒளிப்பதிவு: தனபால், இசை: ஹித்தேஷ், நடனம்: ராதிகா, ஸ்டன்ட்: நாக்அவுட் நந்தா, இணை தயாரிப்பு: போடி நாயக்கனூர் விஜயகுமார்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)