
ராம் பிக்சர்ஸ் சார்பில் டாக்டர் வி.ராம்தாஸ் தயாரிக்கும் படம் கன்னக்கோல். இதில் நாயகனாக பரணி, நாயகியாக காருண்யா நடிக்கின்றனர். முக்கிய கேரக்டரில் கஞ்சா கருப்பு வருகிறார். இளவரசு, அகோரம், ராஜ்கபூர், சார்லி, செவ்வாளை, சிங்கமுத்து, தீப்பெட்டி கணேசன், பூவை சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி வி.எ.குமரேசன் இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார்.
உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தயாராகிறது. அத்தனை பேரும் திருடர்களாக உள்ள ஊரில் நால்வரை தவிர எல்லோரும் திருந்தி விடுகின்றனர். அந்த நால்வர் மட்டும் திருடி ஜாலியாக வாழ்கிறார்கள். அவர்கள் திருந்தினார்களா? இல்லையா? என்பதே கதை. காமெடி படமாக தயாராகிறது.
பாண்டிச்சேரி, புதுக்கோட்டை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடக்கிறது.
ஒளிப்பதிவு: ஸ்ரீசெல்வா, இசை: பாபி, எடிட்டிங்: சுரேஷ் அர்ஸ், பாடல்: முத்து விஜயன், நடனம்¢ பாபி ஆண்டனி, ஸ்டண்ட் : விஜய், இணை தயாரிப்பு: அகோரம்.