Recent Post

பாடகியான உன்னி கிருஷ்ணனின் மகள்!




தலைவா படத்தை தொடர்ந்து இயக்குனர் விஜய், குழந்தை நட்சத்திரம் சாராவை வைத்து சைவம் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் நாசர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் ‘சைவம்’ படத்திற்காக நா. முத்துகுமார் இயற்றிய ‘ அழகே …அழகே‘ என்ற பாடல் ஜி. வி .பிரகாஷ் இசையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்தப் பாடலை பாடியதோ மழலை மாறாத ஒரு சின்ன குயில். அந்த குயில் பாடலை பாட ஸ்பெஷல் டிரெயினிங் கொடுத்திருக்கிறார் உன்னி கிருஷ்ணன்.
அந்த குயிலின் பெயர் உத்ரா உன்னி கிருஷ்ணன். மெய் மறக்க செய்யும் குரலில் நம்மை மயக்கிய உன்னி கிருஷ்ணனின் மகள் தான் அவர். ‘இந்த வயதில் இப்படி ஒரு ஆழ்ந்த இசை ஞானத்தை பார்த்ததே இல்ல. பயிற்சியாலோ, பாரம்பரியதாலோ, மட்டும் வருவதில்லை இசை ஞானம். அது ஒரு வரம் என்பதற்கு உதாரணம் உத்ரா உன்னி கிருஷ்ணன்தான்.
குழந்தை நட்சத்திரம் சாராவுக்கு பொருத்தமான குரல் வேண்டும் என்று இயக்குனர் விஜய் மென கெட, தேடல் ஆரம்பித்தது. தேடும் போது கிடைத்த பொக்கிஷம் உத்ரா. உத்ராவின் குரலில் சாராவின் அபிநயத்தில் ‘அழகே அழகே‘ மிக வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கும், இயக்குனர் விஜய் உடன் இணைந்து நான் பணியாற்றிய படங்கள் அனைத்தும் இசையில் பெரும் வெற்றி பெற்ற படங்கள், இந்த படமும் விதிவிலக்கல்ல‘ என்று குரலில் பெருமை பொங்க கூறுகிறார் இசை அமைப்பாளர் ஜி. வி .பிரகாஷ்.
சோனி மியூசிக் நிறுவனம் ‘சைவம்’ படத்தின் இசை உரிமையை பெற்று இருக்கிறது . ‘சைவம் ‘ இசை வெளியீட்டு விழா ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. 


Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)