Recent Post

விஜய்க்கு ஜோடி ஸ்ருதி ஹாசன்!




ஜில்லா’ ரிலீஸை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
‘துப்பாக்கி’ ஹிட் படத்துக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் முடிந்த பிறகு சிம்புதேவன் படத்துக்கு விஜய் வருகிறார். விஜய்யின் மேனேஜர் பி.டி.செல்வகுமார் இப்படத்தை தயாரிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க பல முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
ஆனால் அவர்களில் யாரும் ஒத்து வரவில்லையாம். இந்நிலையில்தான் தற்போது விஜய் ஜோடியாக நடிக்க ஸ்ருதி ஹாசனிடம் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். அதோடு படத்தில் ஸ்ரீதேவியும் நடிக்க உள்ளாராம். மேலும் வில்லனாக ‘நான் ஈ’ புகழ் சுதீப் நடிக்கப் போகிறாராம். சிம்புதேவன் சொன்ன கதையில் ‘இம்ப்ரஸ்’ ஆன சுதீப் வில்லனாக நடிக்க உடனே சம்மதித்துவிட்டாராம்.
படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமானாம். இதற்குமுன்பு ஏ.ஆர்.ரகுமான், விஜய்யின் ‘உதயா’, ‘அழகிய தமிழ்மகன்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இது இருவரும் இணையும் மூன்றாவது படம். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)