Recent Post

சைகோ கதையில் பூனம் கவுர்



சைகோ கதையில் பூனம் கவுர்
சைகோ காதல் கதையில் நடிக்கிறார் பூனம் கவுர். நெஞ்சிருக்கும் வரை, 6 மெழுகுவர்த்திகள், உன்னைப்போல் ஒருவன் படங்களில் நடித்த பூனம் கவுர் நடிக்கும் படம் அச்சாரம். இப்படம் பற்றி இயக்குனர் மோகன் கிருஷ்ணா கூறியதாவது: தஞ்சாவூரில் ஒரத்தநாடு அருகில் உள்ள மேலவுலூர் கிராமத்தில் சில வருடங்களுக்கு முன் ஒரு சம்பவம் நடந்தது. திருமணத்தன்று யாருக்கும் தெரியாமல் காதலனுடன் ஓடிவிடுகிறாள் மணப்பெண். அதன்பிறகு அப்பெண் பலவிதமாக பாதிக்கப்படுகிறார். சைகோ ஒருவன் அவளை பழிவாங்க முயல்கிறான். அதை த்ரில்லாக இப்படம் சொல்லும். பூனம் கவுர் ஹீரோயின். கணேஷ் வெங்கட்ராமன், முன்னா ஹீரோக்கள். ரேகா, ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் ஷூட்டிங் 3 காலகட்டமாக படமாக்கப்பட்டிருக்கிறது. சம்பவம் நடந்த ஒரத்தநாடு மற்றும் சென்னை, கொடைக்கானலில் ஷூட்டிங் நடந்துள்ளது. ஆர்.கே.பிரதாப் ஒளிப்பதிவு. ஞானதேஸ் அம்பேத்கர் தயாரிப்பு. - 

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)