Recent Post

தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு படத்தில் அமீர்கான்



தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு படத்தில் அமீர்கான்
புதுடெல்லி, ஏப்.2-

மக்களவை தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சமூக அந்தஸ்து உடைய பிரபலங்களை வைத்து விளம்பர படங்கள் மூலம் அப்பணியை செய்து வருகிறது தலைமை தேர்தல் ஆணையம். இவ்வாணையம் உருவாக்கியுள்ள விளம்பர படம் ஒன்றில் சமூக சிந்தனையாளரும் இந்தி நடிகருமான அமீர்கான் நடித்துள்ளார்.

1 நிமிடம் 22 வினாடிகள் ஓடும் இவ்வீடியோ காட்சியில் அவர் மக்களை பார்த்து “உங்களது உரிமையை விட்டுக்கொடுக்காமல் நேர்மையாக வாக்களியுங்கள்” என்று கூறுவதாக அமைக்கப்பட்டுள்ளது.

கை மணிக்கட்டில் மூவர்ண பட்டையுடன் தோன்றும் அமீர்கான் “யாருக்காகவும் எதற்காகவும் உங்களது ஓட்டை விற்காதீர்கள், மதம், இனம் போன்ற வேறுபாடுகளை களைந்து அறநெறிபடி வாக்களியுங்கள்” என்று கூறுகிறார்.

இவ்விளம்பர காட்சியில் இவருடன் இணைந்து இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், இந்திய கிரிக்கெட் வீரர் டோனி, பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நெக்வால், குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் ஆகியோரும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கின்றனர்.

இவ்வீடியோ குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில் “அமீர்கான் இவ்விழிப்புணர்வு படத்தில் நடித்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இவ்விழிப்புணர்வு விளம்பரம் அனைத்து சமூக ஊடகங்கள் வழியாகவும் மக்களை சென்றடையும். இவ்விளம்பர படம் தேர்தல் ஆணைய இணைய தளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.   

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)