
பாஜ அணியில் மாநில தேர்தல் பிரசார செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் எஸ்.வி.சேகர் அளித்த பேட்டி:தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த தேர்தலில் மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. ஓட்டு சிதறுவதற்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது. எனவே குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தான் வேட்பாளர்கள் ஜெயிக்க முடியும். பாஜ கூட்டணியில் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறுவது உண்மையல்ல. அதிமுகவிலிருந்து நானாக வெளியேறவில்லை. தேர்தலில் செலவு கணக்கை சரியாக காட்டிய குற்றத்துக்காக வெளியேற்றப்பட்டேன். நான் அதிமுகவில் இருந்த வரையிலும் ஜெயலலிதா காலில் விழுந்ததில்லை.
ராகுல் அழைத்தார் என்பதற்காக காங்கிரசுக்கு சென்றேன். அது ஏதோ விடுமுறைக்கு சென்று வந்து போல், அவ்வளவுதான். பாஜவுக்காக கடந்த 91 முதல் 2004 வரை பிரசாரம் செய்து வந்துள்ளேன். தற்போது பாஜவுக்காக பிரசாரம் செய்ய ஒத்துக் கொள்ளும்போதே பிரசார தலைவர் பதவி வேண்டும் என்று கூறினேன். ஆனால் அவர்கள் செயலாளர் பதவி அளித்துள்ளனர். மேலும் நான் ஒன்றும் வேட்பாளரல்ல. பணம் தருகிறார்கள், பிரசாரம் செய்கிறேன். எள்ளு எண்ணெய்க்கு காய¢கிறது. எலி புழுக்க எதற்காக காய வேண்டும். இவ்வாறு எஸ்.வி.சேகர் கூறினார்.