Recent Post

ஜெய்யுடன் மீண்டும் கைகோர்த்த இயக்குனர் சரவணன்



ஜெய்-அஞ்சலியை வைத்து ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை எடுத்த இயக்குனர் எம்.சரவணன் அப்படத்திற்கு பிறகு விக்ரம் பிரபுவை வைத்து ‘இவன் வேற மாதிரி’ என்ற படத்தை எடுத்தார். இரு படங்களும் பெரிய அளவில் ஹிட்டாயின.

இப்படங்களைத் தொடர்ந்து சரவணன் தற்போது ஜெய்யை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இப்படம் அதிரடி ஆக்ஷன் கலந்த காதல் கதையாம். சென்னையின் ஒரு பகுதியை மையமாக வைத்து கதையை உருவாக்கியிருக்கிறாராம். இப்படத்திற்காக ஜெய்யின் தோற்றத்தில் நிறைய மாற்றம் செய்யவிருக்கிறார்களாம்.

‘சூது கவ்வும்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் ஒளிப்பதிவாளராகவும், இமான் இசையமைப்பாளராகவும், ராஜமோகன் ஆர்ட் டைரக்டராகவும் பணியாற்றவுள்ளனர். இப்படத்தில் ஜெய்யுடன் நடிக்கும் கதாநாயகிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இம்மாதம் படப்பிடிப்பை தொடங்க இருக்கின்றனர். எஸ்.கே.ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.
ஜெய்யுடன் மீண்டும் கைகோர்த்த இயக்குனர் சரவணன்

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)