Recent Post

விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரியை தேர்வு செய்தது ஏன்? மெல்லிசை இயக்குனர் விளக்கம்



naduvula1
விஜய் சேதுபதியுடன் காயத்ரி தொடர்ந்து நடிக்கிறார். விஜய்சேதுபதிதான் அவருக்கு வாய்ப்பு வாங்கித் தருகிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மெல்லிசை படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி, மெல்லிசையில் விஜய்சேதுபதியின் ஜோடியாக காயத்ரி நடிக்க தேர்வானது எப்படி என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது: மெல்லிசையின் கதையை ஒரு வருடத்துக்கு முன்பே விஜய்சேதுபதியிடம் சொல்லிவிட்டேன். இப்போது கைநிறைய படங்கள் இருக்கிறது. ஒரு வருடம் எனக்காக காத்திருக்க முடியுமா என்று கேட்டார்.
நானும் அதற்கு ஒத்துக் கொண்டு படத்தின் மற்ற வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். இந்த நிலையில் விஜய்சேதுபதி தயாரித்து நடிப்பதாக இருந்த ஒரு படம் டிராப் ஆனதால் அந்தப் படத்திற்காக ஒதுக்கி வைத்திருந்த ஒரு மாத கால்ஷீட் காலியாக இருந்தது.
என்னை அழைத்த விஜய்சேதுபதி, உங்கள் படத்தை உடனே ஆரம்பித்து ஒரு மாதத்துக்குள் முடிக்க முடியுமா என்று கேட்டார். நான் தயார் நிலையில் இருந்ததால் ஒப்புக் கொண்டேன். ஒரு மாதம் தொடர்ச்சியாக கால்ஷீட் தரக்கூடிய ஹீரோயினை தேடினோம் பலர் பத்து பத்து நாளாக பிரித்துதான் தரமுடியும் என்றார்கள்.
அப்போது ஒரு மாத கால்ஷீட் தர தயாராக இருந்தவர் காயத்திரி. அதனால் அவர் தேவர்வானர். மற்றபடி யாரும் அவரை சிபாரிசு செய்யவில்லை.
படத்தில் விஜய் சேதுபதி ஆல்பம் இயக்குனராகவும், காயத்ரி பாட்டு டீச்சராகவும் நடித்திருக்கிறார்கள். பரபரப்பான நகர சூழ்நிலையில் இவர்களது இசை காதல் என்ன ஆகிறது என்கிற கதை. படத்தில் இசைக்கு பெரிய முக்கியத்துவம் இருப்பதால் மெல்லிசை என்று பெயர் வைத்திருக்கிறோம் என்றார்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)