
வீரம் படத்திற்குப் பிறகு கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்கிறார்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதெல்லாம் ஏற்கெனவே தெரிந்த விஷயம்.
ஆனால் இந்தப் படத்தில் அஜித்துடன் முக்கிய கேர்கடரில் அருண் விஜய் நடிக்கிறார் என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இந்த தகவல் படக் குழுவினரால் உறுதிபடுத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில், கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித்துடன் தான் நடிக்கவிருப்பதாக அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தனக்கு உண்மையில் மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது அருண் விஜய், ’டீல்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.