
வீரம் படத்தின் வெற்றியை அடுத்து அஜித் கௌதம்மேனன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
அஜித்-கௌதம் மேனன் இருவரும் இணையும் முதல் படம் இது. சில ஆண்டுகளுக்கு முன்பு கெளதம்மேனன் படத்தில் அஜித் நடிப்பதாக இருந்தது. ஆனால் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப்படம் நிறுத்தப்பட்டது. இப்போது சில வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு அஜித்துடன் மீண்டும் கெளதம்மேனன் இணைந்திருக்கிறார்.
அஜித் - கௌதம் மேனன் படம் பற்றிய அறிவிப்பு எப்போது வெளியானதோ அப்போதிலிருந்து ‘அஜித்’ ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அஜித் ரசிகளுக்கும் மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை சொல்லப் போகிறேன். அஜித்-கௌதம் மேனன் இணையும் புதிய படத்தின் துவக்க விழா வருகிற 9-ஆம் தேதி நடைபெறவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
அஜித் நடித்த ‘ஆரம்பம்’ படத்தை தயாரித்த ‘ ஸ்ரீச்தய சாய் மூவீஸ்’ நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கவிருக்கிறது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடி யார்? இசை அமைப்பாளர் யார்? என்பது போன்ற அதிகாரபூர்வ விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.