Recent Post

அழகிய பாண்டிபுரம்




தாய்மண் புரொடக்ஷன் சார்பில் ந.கிருபாகரன் தயாரிக்கும் படம் ‘அழகிய பாண்டிபுரம்’. இதில் நாயகனாக புதுமுகம் இளங்கோ, நாயகியாக அஞ்சனா கீர்த்தி நடிக்கின்றனர். ஸ்ரீமன், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, பஞ்சு சுப்பு, மீராகிருஷ்ணன், பாத்திமாபாபு, யுவராணி, கிரேன் மனோகரர், முத்துக்காளை, சிசர் மனோகர், நெல்லை சிவா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தை ந.ராயன் இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார். வீட்டுக்கு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை நேசிக்க வேண்டும். நட்பாக இருக்க வேண்டும். ஈகோவினால் அவர்களுடன் பகையை உருவாக்க கூடாது என்ற கருத்தை மையமாக வைத்து காதல் படமாக தயாராகிறது.

இதன் படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதிகளில் நடக்கிறது. இளங்கோவுடன் கவர்ச்சி நடிகை ரிஷா இணைந்து ஆடும் ஒரக்கண்ணாலே உத்து உத்து பாத்து என்ற பாடல் காட்சியை கிளுகிளுப்பாக படமாக்கியுள்ளனர். கட்டழகி நானப்பா, கொட்டிவச்ச தேனப்பா என்ற பாடலில் இளங்கோவுடன் இணைந்து இந்தி நடிகை ஆக்னஸ் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார்.

ஒளிப்பதிவு: அகிலன், இசை: பரத்வாஜ், பாடல்: பா.விஜய், நா.முத்துக்குமார், விவேகா, எடிட்டிங்: சுரேஷ்அர்ஸ், நடனம்: சிவசங்கர், அசோக் ராஜ், ஜாய்மதி, ஸ்டண்ட்: சூப்பர் சுப்பராயன்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)