Recent Post

அஜித்துடன் மோதும் அரவிந்த்சாமி மற்றும் அருண்விஜய்!




வீரம் படத்திற்கு பிறகு அஜித், கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்பதுதான் தற்போது தமிழ் திரையுலகின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இதில் அஜித்துக்கு ஜோடி அனுஷ்கா. படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருக்கிறார். இப்படத்தில் கௌதம் மேனனோடு இணைந்து ஸ்ரீதர் ராகவன் பணியாற்ற இருக்கிறார். இவர் இந்தியில் பிரபல கதையாசிரியர் ஆவார். இந்நிலையில் படம் பற்றி மேலும் சில தகவல்கள் வந்துள்ளன. அஜித் - கெளதம் மேனன் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பது உறுதியாகி உள்ளது.
மேலும் படத்தில் அஜித்திற்கு இரண்டு வில்லன்களாம். அந்த வில்லன்களாக அரவிந்த்சாமி மற்றும் அருண்விஜய் இருவரும் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இருவரும் இதுவரை நாயகர்களாக மட்டும் நடித்து பழக்கப்பட்டவர்கள். முதன் முறையாக இந்தப் படத்தில் வில்லன் வேடம் ஏற்றிருக்கிறார்கள்.
பொதுவாக கௌதம் மேனன் படமென்றால் அதில் ஹீரோவுக்கு சமமான வேடம் வில்லன்களுக்கும் இருக்கும். அந்த அடிப்படையில்தான் இருவரும் வில்லன்களாக நடிக்க ஒப்புக்கொண்டார்களாம். டான் மெக்கார்தர் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இந்த புதிய கூட்டணியை வைத்து கெளதம் மேனன் அதிரடியான ஒரு போலீஸ் ஆக்ஷன் கதையை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)