
ரெபேல் ஸ்டூடியோஸ் சார்பில் தீபன் பூபதி மற்றும் ரெதேஷ் வேலு தயாரிக்கும் படம் மெல்லிசை. இதில் விஜய்சேதுபதி நாயகனாகவும், காயத்ரி நாயகியாகவும் நடிக்கின்றனர். இப்படத்தை ரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்குகிறார். இவர் ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். படம் பற்றி அவர் சொல்கிறார்.
நவீனமாக்கப்பட்ட நகர வாழ்வின் சிக்கலை சொல்லும் கதை. இங்கு எல்லோரும் சுவராஸ்யமாக வாழ்கிறோம். ஆனால் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்கிறோமா என்பதுதான் இந்த கதையின் கரு. மெல்லிசை என்பது மேலும் மேலும் கேட்க தூண்டும் சுகமான இசை வடிவம். இந்த படத்தின் கதாபாத்திரங்கள் இசை சம்மந்தப்பட்டவர்கள்.
இந்த படத்தின் நவீன கதை அமைப்புக்கு அறிமுக இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசைகளமாக அமையும். ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் படப்பிடிப்பில் காட்டிய வேகம் பிரமாதம். படப்பிடிப்பு இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன. வித்தியாசமான கதை களங்களில் நடிக்கும் விஜய் சேதுபதி சமீபத்தில் கேட்டு வியந்த கதை இது. எடிட்டிங்: பவன் ஸ்ரீகுமார், வசனம்: கிருஷ்ண சிதம்பரம், பாடல்: மதன் கார்கி.