Recent Post

நடனம், சண்டை, காதல் காட்சிகளில் வெளுத்து வாங்கும் சந்தானம்!



நடனம், சண்டை, காதல் காட்சிகளில் வெளுத்து வாங்கும் சந்தானம்!நகைச்சுவை நடிகர் சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியிலும், திரையுலக பிரமுகர்கள் மத்தியிலும் பாராட்டு மற்றும் வரவேற்பை பெற்றுள்ளது. இது சந்தானத்திற்கு உச்சகட்ட மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

தமிழ் திரை உலகில் ஏறத்தாழ எல்லா நடிகர்களுக்கும் நெருங்கிய நண்பனாக நடித்து, அவர்களுக்கு நண்பனாகவே மாறிவிட்ட சந்தானத்துக்கு அவர்களின் பாராட்டு மிகவும் ஊக்கம் அளித்துள்ளதாம். கதாநாயகனாக நடிப்பதற்காகவே தீவிர எடை குறைப்பில் ஈடுபட்டு இப்படத்தில் இருபது வயது இளைஞன் போல் தோற்றமளிக்கிறார் சந்தானம். மேலும் இப்படத்திற்காக பிரத்தியேக பயிற்சிகள் மூலம் நடனம் மற்றும் சண்டை பயிற்சியும் கற்றுக் கொண்டுள்ளாராம். இவருக்கு கதாநாயகியாக ஆஷ்னா சாவேரி என்பவர் நடிக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குனர் ஸ்ரீநாத் கூறும்போது, தான் கதாநாயகனாக நடிக்கும் படம் எந்த வகையிலும் ஜனரஞ்சகத்தில் கொஞ்சம்கூட குறையக்கூடாது என்ற எண்ணத்தில் எல்லா காட்சிகளிலும் ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார் சந்தானம். நகைச்சுவையில் கோலோச்சும் சந்தானம் குணசித்திரம், நடனம், சண்டை, காதல் என எல்லா காட்சிகளிலும் வெளுத்து கட்டுகிறார். இப்படம் எல்லா தரப்பு ரசிகர்களை கவரும் வண்ணம் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)