Recent Post

"மனோரமாவின் உடல் நிலை சீராக உள்ளது'




நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பழம் பெரும் நடிகை மனோரமாவின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் சாதாரண சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மூட்டு வலி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்த மனோரமாவுக்கு, ஞாயிற்றுக்கிழமை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவரது உறவினர்கள் அவரை சென்ன கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட இதய பரிசோதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள மனோரமாவிற்கு எந்தவிதமான இதய மருத்துவ சிகிச்சைகள் அளிப்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், அவரது உடல்நிலை சீராக உள்ளது எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)