
தமிழ் புத்தாண்டு ரசிகர்கள் பெரிய விருந்தே காத்திருக்கிறது. காரணம், அன்றைய தினத்தில் ‘ஐ’, ‘அஞ்சான்’, ‘கத்தி’ ஆகிய படங்களின் ஃபர்ஸ்ட் லுக் வெளியர இருக்கின்றன.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் - எமிஜாக்சன் நடித்திருக்கும் படம் ஐ. கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக உருவாகிவரும் இப்படம் வருகிற மே மாதத்தில் திரைக்குவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக தமிழ்ப் புத்தாண்டு(ஏப்ரல் 14ம் தேதி) அன்று ‘ஐ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸரை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
இதே நாளில்தான் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’கும் வெளிவர இருக்கிறதாம். அதேபோல் லிங்குசாமியின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் தமிழ்ப் புத்தாண்டான ஏப்ரல் 14ம் தேதி வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.
இதுதவிர இந்த மூன்று படங்களுக்கும் வேறு ஒரு ஒற்றுமையும் இருக்கிறது. ஆமாங்க கத்தி படத்தில் விஜய், ஐ படத்தில் விக்ரம், அஞ்சான் படத்தில் சூர்யா ஆகிய மூவரும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார்களாம்.