Recent Post

விஜய் ஆண்டனியின் அடுத்த த்ரில் படம் இந்தியா பாகிஸ்தான்



விஜய் ஆண்டனியின் அடுத்த த்ரில் படம் இந்தியா பாகிஸ்தான்
தமிழில் நாக்குமுக்க பாடல் மூலம் மிகவும் பிரபலமானவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. அதையடுத்து விஜய்யின் வேட்டைக்காரன், வேலாயுதம் மற்றும் பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இசை மட்டுமில்லாமல் ‘நான்’ படம் மூலம் நடிகராகவும் களமிறங்கினார். அதன்பிறகு தயாரிப்பாளராகவும் களம் இறங்கி சலீம், திருடன் போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படங்கள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில், தற்போது  ‘இந்தியா பாகிஸ்தான்’ என்னும் படத்திலும் நடிக்க தயாராகியிருக்கிறார்.

விஜய் ஆண்டனியே தயாரிக்கும் இப்படம், கிரிக்கெட் விளையாட்டைப் பற்றிய படம் ஆகும். இந்தியா-பாகிஸ்தானுக்கிடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் முக்கிய இடம் பெறுகிறதாம். இப்படத்தை அறிமுக இயக்குனர் என்.ஆனந்த் இயக்குகிறார்.

இப்படம் குறித்து விஜய் ஆண்டனி கூறுகையில், “இப்படத்தின் தலைப்பு சர்ச்சைக்குரியதாக பேசப்படலாம். ஆனால், கதைக்கரு மிக எளிமையானது. ஆக்சன் மற்றும் த்ரில் கலந்த இப்படத்தின் படப்பிடிப்பும், திருடன் படப்பிடிப்பும் ஒரே சமயத்தில் தொடங்கும்” என்றார்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)