Recent Post

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் – திருடப்பட்ட திரைக்கதையா?



bindu-madhavi-arulnithi-ashrita-shetty-still-from-oru-kanniyum-moonu-kalavanigalum_1396353369200
உலகஅளவில் திரைக்கதையில் புதுமையையும் புரட்சியையும் ஏற்படுத்திய படங்களில் முக்கியமானதொரு படம் – ராஷோமான். 1950 ஆம் ஆண்டில் வெளியான இப்படத்தை இயக்கியவர் திரைப்படமேதையான அகிராகுரோசாவா.
ராஷோமான் படத்தின் திரைக்கதையை உத்தியை தழுவித்தான் பல வருடங்களுக்கு முன் அந்த நாள் என்ற படத்தை இயக்கினார் வீணை எஸ்.பாலசந்தர்.
சில வருடங்களுக்கு முன் கமல் இயக்கிய விருமாண்டி படமும் ராஷோமான் படத்தின் திரைக்கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படமே. திரைக்கதையில் புதுமையையும் புரட்சியையும் ஏற்படுத்திய மற்றொரு திரைப்படம் -ரன் லோலா ரன்.
1998 ஆம் ஆண்டில் வெளிவந்த ஜெர்மனிய திரைப்படமான ‘ரன் லோலா ரன்’ படத்தின் திரைக்கதையும் ராஷோமான் திரைக்கதைக்கு நிகரானது. ராஷோமான் படத்தைப்போலவே இப்படத்திலும் ஒரே சம்பவங்கள்தான்.! சில நிமிட இடைவெளியில் அந்த சம்பவங்கள் நடைபெற்றால் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதுதான் கதை.
வித்தியாசமானமுறையில் அமைக்கப்பட்ட திரைக்கதைதான் ரன் லோலா ரன் படத்தை அப்போது பரபரப்பாக பேச வைத்தது. இப்படத்தின் திரைக்கதையைத்தான் அப்படியே காப்பியடித்து தன்னுடைய ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.
இதே சிம்புதேவன்தான் விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார்.
அதை எங்கேருந்து சுட்டிருப்பார்னு தெரியலையே..!

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)