Recent Post

சமந்தா படத்தில் ஆடுவது ஏன்? தமன்னா தந்தை விளக்கம்



சமந்தா படத்தில் ஆடுவது ஏன்? தமன்னா தந்தை விளக்கம்
ஒரு வருடத்துக்கு முன் ஹீரோயினாக நடிக்க வந்த வாய்ப்பை ஏற்காத தமன்னா தற்போது சமந்தா ஹீரோயினாக நடிக்கும் அதேபடத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். வி.வி.விநாயக் இயக்கும் தெலுங்கு படத்தில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.இதுபற்றி தமன்னா சார்பில் அவரது தந்தை கூறும்போது,ஒரு பாடலுக்கு தமன்னா நடனம் ஆட ஒப்புக்கொண்டதற்கு முக்கிய காரணம் இப்பாடல் படத்தில் மிகமுக்கியமான காட்சியாக இடம்பெறுகிறது. முதலில் இது  குத்துப்பாடல் இல்லை. ஹீரோவுடன் சேர்ந்து பாடும் காதல் பாடல்தான்.

இந்த பாடலை ஏன் ஏற்க வேண்டும் என்பதற்கு சரியான காரணத்தை இயக்குனர் விநாயக் தமன்னாவிடம் விளக்கினார். ஒரு வருடத்துக்கு முன்பு இதேபடத்தில் ஹீரோயினாக நடிக்க தமன்னாவிடம் அவர் கால்ஷீட் கேட்டிருந்தார்.  தமன்னாவும் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென்று ஸ்கிரிப்ட் மாற்றப்பட்டதால் விலகிக்கொண்டார். ஆனாலும் இயக்குனர் மீது தமன்னா வைத்திருக்கும் மரியாதை காரணமாகவும், அவர் கேட்டுக்கொண்டதற்காகவும் ஒரு பாடலுக்கு ஆடினார் என்றார். 

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)