Recent Post

மீண்டும் இணையும் சரண் – வினய்!




நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் சரண் மீண்டும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.
இந்தப் படத்திற்கு “ஆயிரத்தில் இருவர்” என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இதில் நாயகனாக வினய் நடிக்கிறார். அதுவும் இரட்டை வேடத்தில். இவர் ஏற்கனவே சரண் இயக்கத்தில் “மோதி விளையாடு” என்ற படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் வினய் ஜோடியாக மும்பை கல்லூரி மாணவி ஒருவர் நடிக்கிறார். இந்த படத்திற்கு சரணின் ஆஸ்தான இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையமைக்கிறார். படத்தை சரண், சொந்தமாகவே தயாரிக்கின்றார். ஜுன் மாதத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்து படத்தை டிசம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
கடைசியாக சரண் இயக்கிய படம் அசல். இந்தப் படம் கடந்த 2010ம் ஆண்டு திரைக்கு வந்தது. கிட்டதட்ட 4 ஆண்டுகள் கழித்து இப்போது படம் இயக்குகிறார்.

Email Newsletter



Smiley :)
:D
:)
:[
;)
:D
:O
(6)
(A)
:'(
:|
:o)
8)
(K)
(M)