
கரீனா கபூரை தமிழ் படத்தில் அறிமுகமாக்க ஏற்கனவே அவரை தமிழுக்கு கொண்டு வர பல இயக்குனர்கள் முயன்றனர். பெரும் தொகை தருவதாகவும் ஆசை காட்டினார்கள். ஆனால் இந்தியில் பிசியாக இருந்ததால் தமிழில் நடிக்க மறுத்து விட்டார். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட கரீனாகபூரை அணுகியுள்ளனர்.
அவரும் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது. கரீனா கபூர் அஜய்தேவ் கானுடன் சிங்கம் 2 படத்தில் நடிக்கிறார். மேலும் பல இந்திப் படங்களுக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். சூர்யாவும் வெங்கட் பிரபுவும் இணையும் இப்படத்தின் கதை இதுவரை தமிழ் திரையுலகம் அறியாததாம். வித்தியாசமான களத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்கின்றனர்.
சூர்யா தற்போது லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்தில் நடிக்கிறார். இது முடிந்ததும் வெங்கட்பிரபு படத்துக்கு வருகிறார்.